2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஐவர் கைது

George   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளுக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஐவரை சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுகுற்றச்செயல்கள், மோதல் சம்பவம் மற்றும் தாபரிப்பு வழக்குகளுடன் தொடர்புபட்ட இவர்களுக்கு எதிராக, மல்லாகம் நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

கடந்த வழக்கு தவணைகளுக்கு ஆஜராகத் தவறிய மேற்படி ஜவருக்கும் எதிராக, நீதிமன்றினால் தெல்லிப்பழை பொலிஸார் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X