2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் பிரூட்டத்தை அமுக்கியவருக்கு மறியல்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள திரையரங்கொன்றுக்கு, தனது இரண்டு பிள்ளைகளுடன் வந்த குடும்பப் பெண் ஒருவரின் பிரூட்டத்தை அமுக்கிய சந்தேகநபர் ஒருவரை,  எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், இன்றுஉத்தரவிட்டார்.

கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், மேலும் தெரியவருவதாவது,

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த இளைஞன் ஒருவன், திரையரங்குக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் பிரூட்டத்தினை அமுக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண், குறித்த இளைஞனை கடுமையாகத் திட்டியுள்ளார். இருப்பினும், பெரும்பான்மையின மொழி பேசிய அவ்விளைஞன், அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் இலக்கத்தினை குறிப்பெடுத்து வைத்த அப்பெண், இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த சிறுகுற்றத்தடுப்பு பொலிஸார், வரணி பகுதியைச் சேர்ந்த அவ்விளைஞனை, செவ்வாய்க்கிழமை (14) கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து, அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X