2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பு வலயத்தில் இராணுவம் விவசாயம் செய்துள்ளது

Princiya Dixci   / 2016 ஜனவரி 07 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள், இராணுவத்தினர் விவசாயம் செய்தமைக்கான வரைபடம், வீமன்காமம் பகுதியில் காணப்படுகின்றது.

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த 701.5 ஏக்கர் காணிகள் கடந்த 29ஆம் திகதியன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டன. 

இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினர் விட்டுச் சென்ற சில அடையாளங்கள் காணப்படுகின்றன. விடுவிக்கப்பட்ட பகுதியில் இராணுவத்தினர், விவசாயம் செய்தமைக்கான வரைபடமும் இவற்றில் உள்ளது.

உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லைகள் மற்றும் எல்லைக்குள் அமைந்திருக்கும் இடங்களென இராணுவத்தினரால் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வரைபடத்தில் நெல் வயல் மற்றும் இதர தோட்டக்காணிகள் என்பவற்றுக்கான அடையாளக் குறிப்புக்களும் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X