2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

புத்தாக்கக் கண்காட்சிக்கு விண்ணப்பங்கள் கோரல்

Niroshini   / 2016 மே 17 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் 'ஆயிரம் படைப்புக்கள்' தேசிய புத்தாக்கக் கண்காட்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வட மாகாண மட்டத்தில் புத்தாக்கங்களைத் தேர்வு செய்யும் செயற்பாடு இம்மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் காலை 8 மணி முதல் இடம்பெறவுள்ளது.

இப்புத்தாக்கக் கண்காட்சிக்குரிய புத்தாக்கங்களைத் தயாரித்துச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 18ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போட்டியில் பங்குபற்ற விரும்பும் பாடசாலை மாணவர்கள் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வணிகவியல்சார் புத்தாக்கங்கள் சமர்ப்பிப்போர் திறந்த போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் தமது விண்ணப்பங்களை ஆணையாளர் இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழு இல:525, யூனியன் பிளேஸ் கொழும்பு 02 என்ற முகவரிக்கு உரிய காலத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X