2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

புதிய அரசாங்கமும் வடமாகாண சபையை புறந்தள்ளுகின்றது: சி.வி

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன்

நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் புதிய அரசாங்கமும் வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து ஒத்துழைத்து செயற்படாமல், முன்னைய அரசாங்கம் போன்று தனித்து முடிவெடுத்து வடமாகாணத்தில் செயற்றிட்டங்களை செய்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடிகயில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது. 

இதன்போது, வடமாகாண சபைக்கு தெரிவிக்காமல் பல்வேறு விடயங்கள் நடைபெறுவதை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா எடுத்துக்கூறினார்.

அதாவது, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைமையாக யார் நியமிக்கப்படவுள்ளனர் என்பதை அரசாங்கம் வெளியிடவில்லையென்பதுடன், அது தொடர்பில் கதைக்கவும் இல்லை என்றார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் நகரமயமாக்கல் திட்டம் தொடர்பில் வடமாகாண சபைக்கு எவ்வித விடயங்களும் கூறப்படவில்லை. வடமாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் விவசாய நடவடிக்கை அபிவிருத்தி தொடர்பில் வடமாகாணத்துக்கு எதுவும் கூறவில்லையென்றார்.

ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்விடயத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறியதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலகங்களில் நடைபெறுகின்ற போது, அங்கு சென்று கூட்டத்தை அங்கிருந்து பகிஸ்கரிப்போம் என்றார்.

இதன்போது கருத்துக்கூறிய முதலமைச்சர், முன்னைய அரசாங்கம் எவ்வாறு வடமாகாண சபையை புறந்தள்ளிவிட்டு அனைத்து விடயங்களையும் செயற்படுத்தியதோ அவ்வாறு இந்த அரசாங்கமும் செய்கின்றது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X