2025 ஜூலை 16, புதன்கிழமை

புதிய ஆளுநர் தமிழர்களின் பிரச்சினைகளை நன்கறிந்தவர்

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சொர்ணகுமார் சொரூபன்

 

புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கறிந்தவர். அவர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கதைத்த ஒருவர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது, இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைத்தவர். 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இத்தகைய ஒருவர் வட மாகாண ஆளுநராக வந்திருப்பது எமக்கு எதிர்பார்ப்பை தந்துள்ளது.

ஆளுநர் தனது அதிகாரங்களை வெகுவாகக் குறைத்து மாகாண சபைக்கு அந்த அதிகாரங்களை கொடுக்க வேண்டும். இதன்மூலம் மக்களுக்கான பயன்களை மாகாண சபையினர் செய்தற்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X