2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பூநகரி மீனவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவிகள் வழங்க நடவடிக்கை

Sudharshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த 100 மீனவர்களுக்கு, மீன்களின் இருப்பிடங்களை துல்லியமாக அறியும் ஜி.பி.எஸ். கருவிகள் வழங்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தால் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியம் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக 1 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வலைகள் கடற்றொழில் அமைச்சால் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தங்களுக்கு வலைகளைவிட மீன்களின் இருப்பிடங்களை அறியும் ஜி.பி.எஸ். கருவி வேண்டும் என பூநகரி பிரதேச மீனவர்கள், நீரியல் வளத்துறைத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்தன. இந்தக் கோரிக்கையானது மத்திய கடற்றொழில் அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சு, 100 கருவிகளை அனுப்பி வைத்துள்ளது. விரைவில் அந்தக் கருவிகள் மீனவர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X