2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பொன்னாலை காட்டுக்கு இனந்தெரியாதவர்கள் தீ வைப்பு

George   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி

பொன்னாலைக் காட்டுப் பகுதியில் புதன்கிழமை (17) ஏற்பட்ட தீயால் காட்டிலுள்ள பெருமளவான பற்றைகளும் செடிகளும் எரிந்து நாசமாகின. காடு தீப்பற்றி எரிந்ததை அறிந்த கடற்படையினர் உடனடியாக விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பொன்னாலை மேற்கில் பெருமளவான பிரதேசம் சிறிய காடுகளால் சூழப்பட்டிருக்கின்றது. இந்தக் காட்டில் உள்ள பனைகள், மரங்கள் மற்றும் பற்றைகளுக்கு விசமிகள் அடிக்கடி தீவைப்பதால் பெருமளவான பற்றைகளும் வடலிகளும் பனை மரங்களும் தீயில் எரிந்து நாசமாகி வருகின்றன.

இந்த நிலையில், புதன்கிழமை மதியம் இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்தக் காட்டுக்கு தீமூட்டியுள்ளனர்.

சம்பில்துறையில் உள்ள கடற்படை முகாமில் இருந்து 50க்கும் அதிகமான கடற்படையினர் விரைந்து வந்து, இரு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X