2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை

Niroshini   / 2016 மே 13 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்படும் பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை. நீண்டகாலத்துக்கு பாவிக்கும் வகையில் அது இல்லை என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா தெரிவித்தார்.

இலங்கை  மின்சார சபையின் வட பிராந்திய காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

“65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட பொருத்து வீடுகளை நேரில் சென்று இன்று பார்வையிட்டேன். எனக்கு அந்த வீடுகளில் திருப்தியில்லை. வீடுகள் நீண்டகாலத்துக்கு பாவிக்க வேண்டும். அது அவ்வாறு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் ஈஸ்வரன் சரவணபவன் ஆகியோர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த வீட்டுத்திட்டம் சரியில்லையென்பதை தெளிவுபடுத்தி மாற்றுத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். பொருத்தமானவற்றை தெரிவு செய்து, அதன் மூலம் பயனாளிகள் பயனடைய வேண்டும்.

மக்களுக்கு வீடுகள் எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும். வீடுகள் இல்லாதவனுக்குத் தான் வீட்டின் அருமை தெரியும். இந்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை மாற்றுவழிகளில் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X