2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிறிதொரு நபரின் உழவு இயந்திரத்தை விற்றவர் கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

உழவு இயந்திரத்தின் அனுமதிப் புத்தகம் தொலைந்துவிட்டதாக உரிமையாளரிடம் பொய்கூறி, போலியாக அனுமதிப் புத்தகம் தயாரித்து அதனை பிறிதொரு நபருக்கு விற்பனை செய்த நல்லூர் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரொருவரை, இன்று செவ்வாய்க்கிழமை (23) கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

உரிமையாளரிடமிருந்து உழவு இயந்திரத்தை வாடகைக்குப் பெற்ற ஒருவர், அதன் அனுமதிப் புத்தகம் தொலைந்துவிட்டதாகக் கூறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், உழவு இயந்திர உரிமையாளருக்கும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, பிறிதொரு புத்தகத்தைப் போலியாகத் தயாரித்து, உழவு இயந்திரத்தை நல்லூர் பகுதியைச் சேர்;ந்த ஒருவருக்கு விற்றுள்ளார்.

உழவு இயந்திர உரிமையாளர், உழவு இயந்திரத்தைத் திருப்பிக் கேட்டபோது, தான் உழவு இயந்திரத்தை வைத்து லீசிங் (குத்தகைக்கு) பணம் எடுத்ததாகவும், குத்தகை நிறுவனம் உழவு இயந்திரத்தைக் கொண்டுச் சென்றுவிட்டது என வாடகைக்குப் பெற்றவர் கூறியுள்ளார்.

எனினும், அது பொய்யென அறிந்த உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X