2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பகடிவதை குற்றச்சாட்டு; மாணவனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.றொசாந்த்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவனை பகிடிவதைக்கு உட்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியை சேர்ந்த ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முதலாம் வருட மாணவனை, அதே பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள், கொக்குவில் பகுதிக்கு அழைத்து, பகடிவதைக்கு உள்ளாக்கி, தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இரண்டாம் வருட மாணவனை பொலிஸார் கைது செய்து, யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, மாணவனை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X