2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் பெருந்திருவிழா, இன்று (08) ஆரம்பமாகவுள்ள நிலையில், அனுமதியளிக்கப்படாத பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொலிஸாரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

எவரும் ஆலயத்துக்குச் செல்ல முடியாது. அதனால் இன்று ஆலயத்துக்குச் சென்ற பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் பொலிஸாரினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் பெருந்திருவிழா, நேற்று (08) இரவு 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இதன் போது, உள்வீதியில் திருவிழாவை நடத்தவும் ஒரே நேரத்தில் 100 அடியவர்களுக்கு அனுமதி என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பிரதேச செயலர், சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டுதலில் கோவிலுக்கு மிக வேண்டியவர்கள் மாததிரம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்கள் மாத்திரமே கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், இன்று கோவிலுக்குச் சென்றவர்களில் அனுமதியளிக்கப்படாத பல நூற்றுக் கணக்கானோர் வீதிகளில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .