2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

படையினரின் மருத்துவ முகாம்

George   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், மானிப்பாய், கிரீன் மெமோறியல் வைத்தியசாலையில் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதுடன், 200க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இதன் போது, தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கு விசேட சிகிச்சை வழங்கப்பட்டதுடன், தோல் நோய், இருதய நோய், நீரிழிவு, பற்சிகிச்சை, நரம்பியல், சுவாசநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு சிகிச்சையுடன் மருந்து வழங்கப்பட்டது.

மேலும், போசாக்கு குறைந்த வயோதிபர்களுக்கு போசாக்கு பால்மா பெட்டிகளும்  வழங்கப்பட்டன. இவ்விசேட சிறப்பு மருத்துவ முகாமுக்கு, 15ஆவது தேசிய படையணி, 25ஆவது விஜயபாகு படையணி மற்றும் 4ஆவது மருத்துவ படையணி என்பன, தமது பங்களிப்பினை வழங்கியிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X