2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

படகு சேவையும் நிறுத்தப்பட்டது

Freelancer   / 2022 மார்ச் 10 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக காரைநகர் - ஊர்காவற்துறை பிரதேசங்களுக்கு இடையிலான பயணிகள் படகு சேவை  முன்னெடுக்கப்படவில்லை என பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.  

இதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.  

அண்மைக் காலமாக எரிபொருள் தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக உள்ளது. இந்த தட்டுப்பாடு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.  

இந்த நிலையில் ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் இரண்டு பிரதேசங்களுக்கு இடையிலான நிர்வாக ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இரு பகுதியில் இருந்தும் அரச ஊழியர்கள் தினந்தோறும் சென்று வருகின்றமை வழமை.  

எரிபொருளை காரணங்காட்டி படகு சேவை இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது பயணிகள் மத்தியில் பல்வேறு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நீண்ட தூர பயணத்திற்கு வழிவகுத்துள்ளது. 

இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுத்து,   படகு சேவையினை தொடர்ச்சியாக மேற்கொள்ள வழிவகுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X