Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 06 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான்
யுவதியின் புகைப்படத்தை நிர்வாணமாக இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி பணம் கோரிய இளைஞனுக்கு, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாதகால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் செவ்வாய்க்கிழமை (05) தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட யுவதிக்கு 25 ஆயிரம் ரூபாய் நட்டஈடாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
தென்மராட்சியைச் சேர்ந்த யுவதிக்கும் பருத்தித்துறையைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும் அலைபேசி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நேரில் சந்தித்த வேளையில், குறித்த இளைஞன் யுவதியின் புகைப்படம் ஒன்றை கேட்டுப் பெற்றுள்ளார்.
புகைப்படத்தை ஆபாசமாக இணையத்தில் வெளியிடப்போவதாகவும் அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டுமானால் தனக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் எனவும் யுவதியை மிரட்டியுள்ளார்.
இது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த இளைஞனுக்கு பணம் தருவதாக கூறுமாறு பொலிஸார் யுவதியிடம் கூறினர்.
இதையடுத்து, பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பருத்தித்துறையிலுள்ள பஸ் தரப்பிடத்துக்கு வந்த மாணவன் ஒருவன், யுவதியை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள உணவகத்துக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த இளைஞன் யுவதியிடம் பணத்தைப் பெற்றுக்கொள்ள முனைந்த போது, பொலிஸார் இளைஞன் மற்றும் மாணவன் ஆகியோரை கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட மாணவன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வழக்கு தீர்ப்புக்காக செவ்வாய்க்கிழமை (05) எடுத்துக்கொள்ளப்பட்டபோது,
இளைஞனுக்கு உதவி புரிந்தார் எனக்கூறப்பட்ட மாணவன், எதிரிக்கு எதிராக சாட்சியமளித்ததையடுத்து, நீதிபதி, மாணவனை விடுதலை செய்தார்.
49 minute ago
54 minute ago
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
54 minute ago
01 Oct 2025