2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

படையினரின் வாகனம் மோதி மாணவி பலி

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 24 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதியதில், பாடசாலை மாணவியொருவர் சம்பவ இடத்திலேயே இன்று (24) காலை உயிரிழந்துள்ளார்.

புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு அருகில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்கும் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைச்சேர்ந்த திருலங்கன் கேஷனா (வயது 09) என்ற மாணவியே இவ்வாறு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி, பாடசாலைக்கு தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது, புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு அருகில் கடற்படை முகாம்களுக்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் கவச வாகனம் (பவள்), மாணவி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. குறித்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .