2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பணிப்பாளரின் அநாகரிகச் செயற்பாடு: பெண் ஊழியர் பாதிப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வலிகாமம் மேற்குப் பகுதியிலுள்ள பிரதேச செயலாளர் பரிவில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவரை, உதவித் திட்டமிடல் பணிப்பாளர், ஏனைய உத்தியோகத்தர்களுக்கு முன்னால் தரக்குறைவாகப் பேசியமையினால், குறித்த பெண் உத்தியோகத்தர், மயங்கி வீழந்துள்ளார்.

இதனையடுத்து, சங்காணை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்கை;காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு, குறித்த பெண் உத்தியோகத்தர் மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற முறைகேடான சம்பவம்  தொடர்பில்  குறித்த  உத்தியோகத்தர், உதவி திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக, பிரதேச செயலக உள் மட்டத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது சாட்சி கூறியதாக, சக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் பொருட்டாக குறித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தரை, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பழிவாங்கும் நோக்குடன் நடந்து கொள்வதாகவும், செய்யும் வேலைகளைக் குறை கூறி, அநாகரிகமான முறையிலும் தரக்குறைவாகவும் நடந்து கொள்வதனை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் சக உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் அரசாங்க அதிபருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வரப்படுவதுடன், ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X