2025 ஜூலை 23, புதன்கிழமை

பண மோசடி என செய்தி: ஊடகவியலாளர்கள் முறைப்பாடு

எம். றொசாந்த்   / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மூவர், டுபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட சிங்கள மொழியிலான ஊடகத்துக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று (02) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டுபாயில் 1,198,000 டினார் பணத்தை, இலங்கையைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் மோசடி செய்துள்ளதாகவும் அவர்கள் தேடப்படுவதாகவும், சிங்கள மொழியிலான இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தேடப்படும் குற்றவாளிகள் என தமது படத்தை சிங்கள இணைய ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளமையால் தாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமது சட்டத்தரணியுடன் இணைந்து சென்றே குறித்த முறைப்பாட்டை ஊடகவியலாளர்கள் மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .