Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 24 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
உடுவில் - அம்பலவாணர் வீதிப் பகுதியில், கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை யாழ். மாவட்ட புலனாய்வு பொலிஸார் கைது செய்து, தம்மிடம் ஒப்படைத்ததாக, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் தாக்குதலுக்கு பயன்படுத்த வந்ததாகக் கூறப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உடுவில் , அம்பலவாணர் வீதியில், கடந்த 19ஆம் திகதி பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
காணிப் பிரச்சினை ஒன்றுக்காக, அயல் வீட்டுக்காரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவமே, இவ்வாறு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளும் அளவுக்கு சென்றதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
"சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் நபர் ஒருவர், இந்த சந்தேக நபர்களான கூலிப்படைக்கு 3 இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து, குறித்த வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு சொத்து சேதம் விளைவிக்க திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.
"இதன் பிரகாரமே, கடந்த 19ஆம் திகதி மேற்படி வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது" என, பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
விசாரணையின் பின்னர், அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .