2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

பணத்தை ஒப்படைத்த பொலிஸ் கான்ஸ்டபிள்

செல்வநாயகம் கபிலன்   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் விழுந்திருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள், அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று, இன்று (13) இடம்பெற்றுள்ளது.

 

தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் நேற்று  (12) பணப்பை ஒன்று வீழ்ந்திருந்துள்ளது. இதனை அவதானித்த பொலிஸ் கான்ஸ்டபிளான எஸ். இருதயராஜா அதனை பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்திருந்தார்.

பணத்துடன் பணப்பையை தொலைத்த நபர், முறைப்பாடு பதிவு செய்வதற்காக, இன்று (13) தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்தபோது, பணப்பை கையளிக்கப்பட்டது.

பணத்தைப்  பறிக்கும் பல்வேறு கும்பல்கள் மத்தியில், வீதியில் கிடந்த பணத்தை எடுத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த பொலிஸ் கான்ஸ்டபிளான எஸ். இருதயராஜாவை, பொலிஸ் உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .