2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டும் பலனில்லை

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

யாழ்ப்பாணம் மாநகர சபை, 'குப்பை கொட்டாதீர்கள்' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை எங்கெல்லாம் வைக்கின்றதோ, அந்த இடங்களில் எல்லாம் குப்பைகளை கொட்டும் செயற்பாடு தற்போது அதிகரித்து வருகின்றது.

வீதிகளின் அருகில், பொது இடங்களுக்கு அருகில் குப்பைகளைப் போடாதீர்கள் என்ற வாசகத்தை யாழ்ப்பாணம் மாநகர சபை அறிவித்தல் பதாகைகளில் பொறித்துள்ளது.

எனினும், அந்த இடத்தில் குப்பை கொட்டுவதை பலர் நாளாந்த செயலாகச் செய்கின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறித்த இடத்தில் குப்பைகளை கொட்டுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பலருடைய வேண்டுகோளாக இருந்தாலும், பொறுப்பற்ற விதத்தில் சூழல் அக்கறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுபவர்கள் தானாக திருந்தாவிட்டால் அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கமுடியாத நிலைமை காணப்படுகின்றது.

பொது மக்களின் ஒத்துழைப்புடன் தான் இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X