2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பதாகைகள் சேதம்

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.செம்மணி வீதியில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள் இனம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் உள்ள யாழ்.வளைவுக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவலிங்கம் ஒன்று வைக்கப்பட்டது. அதனை செம்மணி ஈஸ்வரர் என அழைத்தனர்.

அந்நிலையில் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை இரவு சிவலிங்கம் வைக்கப்பட்டு உள்ள இடத்திற்கு அருகிலும், சற்று தொலைவிலுமாக கிறித்தவ சபை ஒன்றினை சார்ந்தவர்கள் என நம்பப்படும் சிலரால் பதாகைகள் வைக்கப்பட்டன.

அதனை அவதானித்த இந்து மதத்தை சேர்ந்த சிலர் பதாகை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை நாட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அவ்விடத்தில் பதட்டம் ஏற்பட்டது.

அதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அந்நிலையில் இன்ற (08) திங்கட்கிழமை அதிகாலை காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள் சேதமாக்கப்பட்டு உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X