Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கில் இருந்து வடக்கு வரையில் பந்தய புறாக்கள் பறந்து சாதனை படைத்துள்ளன.
மாத்தறை டொந்தர பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் புறா பந்தய போட்டி நடத்தப்பட்டன.
பந்தய புறாக்கள் கழகம் யாழ்ப்பாணம் கடந்த 2 வருடகாலமாக புறா பந்தய போட்டிகளை நடாத்தி வருகின்றது. அந்நிலையில் இலங்கையின் மிக தூர போட்டியான "ட்ராகன் மவுத்" போட்டி யாழ்ப்பாணத்தில் பிரபல மகப்பேற்று மருத்துவ நிபுணரான கே சுரேஷ்குமாரின் அனுசரணையுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து, தரைவழிப் பாதையாக சுமார் 600 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ட்ராகன் மவுத் என்னும் பகுதிக்கு 100 பந்தய புறாக்கள் கொண்டு செல்லபட்டு, அங்கிருந்து புறாக்கள் விடுவிக்கப்பட்டன. அவை யாழ்ப்பாணத்தை நோக்கிப் பறக்க தொடங்கின.
அங்கிருந்து 400 கிலோ மீற்றர் வான் தூரத்தில் உள்ள யாழ்ப்பாணத்தை எட்டரை மணி நேரத்தில் வந்தடைந்து முதல் புறா சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து ஏனைய புறாக்களும் வந்து சேர்ந்தன.
குறித்த போட்டியில் முதலிடத்தை பிடித்த புறாவுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பண பரிசிலும், பதக்கம் மற்றும் வெற்றி கேடயம் வழங்கப்படவுள்ளது. அத்துடன், இரண்டாம் இடத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் பண பரிசிலும், மூன்றாம் இடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசிலும் மற்றும் பத்தாம் இடத்திற்குள் வந்த ஏனைய 7 புறாக்களுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் பண பரிசிலும் வழங்கப்படவுள்ளன என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago