2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பனிக்கன்குளத்தில் புகையிரதக் கடவை அமைக்கவும்

Sudharshini   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

பனிக்கன்குளத்தில் புகையிரதக் கடவையொன்றை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது வீடுகளுக்கு செல்லும் பிரதான வீதியாக ஒரேயொரு வீதியே உள்ளது. இருப்பினும் எமது வீதியின் ஊடாக செல்லும் புகையிரதப்பாதையில் கடவை அமைக்கப்படாததால்  விபத்துக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதென பனிக்கன்குளம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவர்கள் காலையில் பாடசாலை செல்லும் வேளையிலும் பாடசாலை விட்டு வீடு வரும் வேளையிலும் புகையிரதம் செல்லும் நேரமாக இருப்பதால் தமக்கு அச்சமாக உள்ளதாகவும் அண்மைக்காலமாக புகையிரத விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும்  தமக்கு உடனடியாக புகையிரத கடவை அமைத்து தருமாறும் அம்மக்கள். கோரிக்கை  விடுத்து நிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X