2025 மே 22, வியாழக்கிழமை

’பனங்காட்டில் புத்திக்கூர்மை”

Editorial   / 2018 மே 10 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

யாழ் மாவட்டத்தில் 'பனங்காட்டில் புத்திக்கூர்மை” எனும் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி யாழ் மாவட்ட படைத்தைலமையகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணப் படைத் தலைமையகத்தின் எற்பாட்டில் இராணுவத்தினரின் கண்டுபிடிப்புக்களை வடக்கு மக்களுக்கும் பயன்பெறும் நோக்கில் இந்த கண்காட்சி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றும் (10) நாளையும் (11) இடம்பெறுகின்றது.

இன்று (10) காலை யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன் கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

இளைஞர் யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய படைப்புக்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக யாழ் மாவட்டத்துக்குட்பட்ட படைப்பிரிவுகளிலுள்ள இராணுவ வீரர்களால் உருவாக்கப்பட்டுள்ள சுமார் 280 க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X