Mithuna / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தவளை என்றால் தாவி,தாவி பாய்ந்து கொண்டிருக்கும் சுபாவம் உடையது. எனினும், பனிக்கூழுக்குள் (ஐஸ் கிரீம்) கிடந்த தவளையொன்று பாயமுடியாது உறைந்து கிடந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிரீம் விற்பனை நிலையம் ஒன்றில் விற்கப்பட்ட ஐஸ்கிரீமில் தவளை ஒன்று காணப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார பரிசோதகர்களினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செல்லவச்சந்நிதி முருகன் கோவிலின் சூழலில் உள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தில், புதன்கிழமை (14) ஒருவர் ஐஸ்கிரீம் ஒன்றினை வாங்கிய வேளை அதனுள் தவளை ஒன்று காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் தற்போது அதிகளவான வெப்பமான கால நிலை நிலவுவதனால், சந்நிதி ஆலயத்திற்கு செல்வோர் அருகில் உள்ள உணவங்களில் குளிர்பானங்களையும்,ஐஸ்கிரீம் விற்பனை நிலையங்களில் ஐஸ் கிரீம்களையுமு் கொள்வனவு செய்து பருகி வருகின்றனர்.
இந்ந்நிலையில் குறித்த உணவகங்கள் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை நிலையங்களின் சுகாதாரம் மற்றும் நீரின் தூய்மை என்பவை தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் கவனம் செலுத்தி , சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எம்.றொசாந்த்
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago