Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2020 நவம்பர் 09 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
பனை அபிவிருத்தி சபையால் உற்பத்திச் செய்யப்படும் பனை சார் உற்பத்திப் பொருள்களை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு இணையவழி மூலம் பெற்றுக்கொள்ளும், புதிய வேலைத்திட்டம் திங்கட்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக, பனை அபிவிருத்தி சபை தலைவர் கிரிசாந்த பத்திராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி சபையின் தலைமை காரியாலயத்தில் வீடுகளில் இருந்தவாறு பனை உற்பத்திப் பொருள்களை கொள்வனவு செய்யும் புதிய வேலைத்திட்டத்தை இன்று (09) ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், எதிர்காலத்தில் இந்தத் திட்டமானது, மேலும் விரிவாக்கப்பட்டு, யாழ்ப்பாணம் மட்டுமல்லாது இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்கள் பனை உற்பத்திப் பொருள்களை வீடுகளிலிருந்து மிகவும் மலிவான முறையில் பெற்றுக்கொள்ளும் திட்டமாக இது அமையுமென்றார்.
மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் பனை மரத்தை அனுமதியின்றி தொடர்பான ஒரு பிரச்சினை காணப்படுகின்றதெனத் தெரிவித்த அவர், அந்தப் பிரச்சினைக்கு ஏற்கெனவே சட்டம் உள்ளதெனவும் எனினும், அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை காணப்படுகின்றதெனவும் கூறினார்.
எனினும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதெனத் தெரிவித்த அவர், எந்தப் பகுதியிலாவது அல்லது எந்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலாவது பனை மரம் வெட்டப்படுகின்றது என்ற முறைப்பாடு தெரிவிக்கப்படும் இடத்தில், உடனடியாக அந்த இடத்துக்கு சம்பந்தப்பட்டோர் உடனடியாகச் சென்று, உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து, சட்ட நடவடிக்கை உட்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
34 minute ago
42 minute ago
1 hours ago