Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 14 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம், கோப்பாய், சிறுப்பிட்டி கிழக்கு, பன்னாலை பகுதி மக்கள் குடிநீரின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
150க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்தப் பிரதேச மக்கள், குடிநீரின்றி வெளியிடங்களுக்குச் சென்று நீர் எடுத்து வருகின்றனர்.
ஒவ்வொருநாளும் குடிநீர் பெறுவதற்காக பல கிலோமீற்றர் சென்று வருவதால், இதற்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டியுள்ளதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் மயில்வாகமிடம் வினவியபோது, இந்தப் பிரதேசத்துக்கு இப்பொழுது வாரத்துக்கு இரு தடவைகள் பவுசர் மூலம் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பல தடவைகள் குடிநீர் வசதியைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தும் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ வந்து கூடப் பார்க்கவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
25 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
1 hours ago
1 hours ago