Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 மே 09 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
யாழ்ப்பாணம் மாநகர சபையால் முன்னெடுக்கப்படும் சாதாரண செயற்பாடுகளை கூட, பயங்கரவாத செயற்பாடுகளாக அரசாங்கம் சித்தரிப்பதாக, யாழ்.மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். மாநகர சபையின் அபராதம் அறவிடும் பணியாளர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் செயற்பாடுகளை முடக்கும் வகையான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் தன்னை கைது செய்ததன் மூலம் சபையால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை முழுமையாக முடக்கிவிடலாம் என்றே அரசாங்கம் நினைத்ததகனவும் கூறினார்.
ஆனாலும், அரசாங்கத்தின் சட்டத்துக்கு முரணான செயற்படுகளை எதிர்த்து, கட்சி பேதங்களின்றி, அனைத்து தரப்பினர்களும் ஒன்றுசேர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக, அரசாங்கத்தின் திட்டம் கைகூடவில்லை.யெனத் தெரிவித்த அவர், இதன் தொடர்ச்சியாக, சபையின் அபராதம் அறவிடும் பணியாளர்கள், கொழும்பு நான்காம் மாடிக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனரெனவும் சாடினார்.
இந்த விசாரணை அழைப்பு என்பது, தமிழ் மக்களுக்கு அரசாங்கம் விடும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், மமிழர் தாயகத்தின் நன்மைகளுக்காக முன்னின்று செயற்ப்படுபவர்களையும், அவர்களுடன் இணைந்து பயணிப்பவர்களையும் இல்லாமல் செய்யும் நடவடிகையையே, அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்ட பணியாளர்களுக்கான சட்ட உதவிகளை, மாநகர மேயராகவும், சட்டத்தரணியாகவும் முன்னின்று நிச்சியம் செய்வேனெனவும், மணிவண்ணன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago