2025 மே 05, திங்கட்கிழமை

பயணத் தடையைப் பயன்படுத்தி கொள்ளை

Niroshini   / 2021 மே 16 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நாடாளாவிய ரீதியில், பயணத் தடை அமுலில் இருக்கும் வேளையில், யாழ்ப்பாணம் -  நாவற்குழி பகுதியில், ஐந்து வீடுகளிலும் கோவில் ஒன்றிலும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நாவற்குழி -  5ஆம் வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள 5 வீடுகளுக்குள்ளும் அடுத்தடுத்து புகுந்த திருடர்கள், ஒரு வீட்டில் 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும், மற்றொரு வீட்டில் 40க்கும் மேற்பட்ட வளர்ப்பு புறாக்களையும் மற்றைய வீட்டில் 16 வளர்ப்பு கோழிகளையும் மற்றைய வீட்டில் 6 வளர்ப்பு கோழிகளையும் ஐந்தாவது வீட்டில் 5 வளர்ப்பு முயல்களையும் திருடியுள்ளனர்.

அத்துடன், நாவற்குழி சித்திர வேலாயுதர் கோவிலின்; ஓட்டைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள், கோவிலில்; இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது; தொடர்பில், சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X