Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2017 ஜனவரி 06 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவி விபத்துக்கு உள்ளாகியுள்ளார் என யாழ்.பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெயரில் முறைப்பாடு பதிவு செய்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை (06) யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போதே இந்த சம்பவம் வெளிவந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த விபத்து சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி யாழ்.மனோகர சந்திக்கு அருகில் இடம்பெற்று உள்ளது. யாழ்.நகரில் இருந்து காங்கேசன்துறை வீதி வழியாக கொக்குவில் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு குறுக்காக திடீரென மாணவி வீதியில் ஓடியதால் விபத்து நேர்ந்திருந்தது. குறித்த விபத்தில் மாணவி சிறு காயங்களுக்கு உள்ளாகி இருந்தார்.
அதனை அடுத்து மோட்டார் சைக்கிள் ஒட்டியின் உறவினர் விபத்துக்கு உள்ளான மாணவியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தார். அதன் பின்னர் மாணவி சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பி 16 ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் ஆங்கில பாடத்திலும் தோற்றியுள்ளார்.
அன்றைய தினம் (16ம் திகதி) மாணவி தான் விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக மாணவியின் பெயரில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு மாணவியின் கையொப்பமும் வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது விபத்தினை ஏற்படுத்தியவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மாணவி பரீட்சை எழுதிக்கொண்டு இருந்த வேளை எவ்வாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய முடியும் என மன்றில் கேள்வி எழுப்பினார்.
அதேவேளை விபத்தினை ஏற்படுத்தியவருக்கு எதிராக பொலிஸாரால் முன்வைக்கபட்ட ஆறு குற்றச்சாட்டுக்களில் மூன்றினை ஏற்றுக்கொள்வதாகவும் மன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து மூன்று குற்றத்திற்கும் 7 ஆயிரத்து 500 தண்டப்பணம் விதித்ததுடன் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.
அத்துடன் குறித்த வழக்கினை எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
3 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 hours ago
6 hours ago