2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பருத்தித்துறை - வவுனியாவுக்கு மேலதிக பஸ் சேவை

George   / 2016 மே 11 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்
 
பருத்தித்துறையில் இருந்து வவுனியாவுக்கு மேலதிக பஸ்சேவையை வெள்ளிக்கிழமை (13) முதல் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி, புதன்கிழமை (11) தெரிவித்தார்.
 
பருத்தித்துறை, மருதங்கேணி, புதுக்காட்டுச் சந்தியூடாக இச்சேவை வெள்ளிக்கிழமை (13) முதல் இடம்பெறவுள்ளது,
 
வழமையாக பருத்தித்துறையில் இருந்து வவுனியாவுக்கு 6 பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
 
இச் சேவையில் பருத்தித்துறையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் பஸ் வவுனியாவைச் சென்றடைந்து பிற்பகல் 1 மணிக்கு அங்கிருந்து பருத்தித்துறை நோக்கிப்புறப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X