2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பரந்தன் - பூநகரி வீதிக்கு நடந்தது என்ன?

Freelancer   / 2022 ஜூன் 26 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் சட்டைப்பைக்குள் காணப்படுகின்றது. இதுதான் எமது நாட்டின் அபிவிருத்தி என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அனுரகுமார திசாநாயக்க இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம் இருக்கும். ஆனால் சில வருடங்களிலேயே அந்த வீதியால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் சட்டைப்பைபக்குள் காணப்படுகின்றது. இதுதான் எமது நாட்டின் அபிவிருத்தி.

விமானம் ஓடாத விமான நிலையம், கப்பல்கள் வராத துறைமுகம், கிரிக்கெட் விளையாடாத மைதானம், கூட்டங்கள் இடம்பெறாத மண்டபங்கள் என்பனவே தற்போது காணப்படுகிறது. 

இது மக்களுக்கான அபிவிருத்தி அல்ல. இது ஊழல்வாதிகள் கொள்ளை அடிப்பதற்கான வழி. தற்போது எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம் ஊழலும் துஷ்பிரயோகமுமே என்றார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X