Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை விரைவில் மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடத்துக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தவால் நேற்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
நெதர்லாந்து அரசாங்கத்தின் 1,180 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இக்கட்டடத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறு சிவாஜிலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார். அதே போன்று இப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக சுமந்திரனும் இதே கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.
இந்நிலையில், இந்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கமைய, ஆதார வைத்தியசாலையாக இருக்கின்ற இந்த வைத்தியசாலை விரைவில் மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்றார்.
மேலும், இவ்வைத்தியசாலைக்கு குழந்தை வைத்திய அதிகாரி இல்லை என்று பொறுப்பு வாய்ந்த அதிகாரி தெரிவித்திருக்கின்ற நிலையில் எதிர்வரும் ஒரு மாதத்தில் இங்கு குழந்தை பெறுபேறு வைத்தியரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2025