2025 ஜூலை 02, புதன்கிழமை

பருத்தித்துறை கலவரம்: மேலும் இருவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 13 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

விசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், நேற்று முன்தினம் (12) மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.  

கைதான இருவரும், துன்னாலை - வேம்படி பகுதியைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார்  தெரிவித்தனர். 

நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் ரோந்து நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், மணல் கடத்தலில் ஈடுபட்ட ஹன்டர் ரக வாகன சாரதி மீது, பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.  

இதையடுத்து, பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த முயன்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு கற்கள் வீசியமை, அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில், இதுவரையில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .