Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை பஸ் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மோட்டார் சைக்கிளில் இருந்து, இரவுவேளையில் எரிபொருட்கள் திருட்டுப் போவதாக, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிமாவட்டங்களுக்கான பஸ் சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள், சாலையில் நிறுத்திவிட்டுச் செல்லும் மோட்டார் சைக்கிள்களில் இருந்தே இவ்வாறு எரிபொருளைத் திருடி வருவதாக, ஊழியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, எரிபொருள் திருட்டைக் கட்டுப்படுத்த, வெளிப்புறப் பகுதிகளில் சீ.சீ.டி.வி.கண்காணிப்பு கமெராவைப் பொருத்த, சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சாலை முகாமையாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
“இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது உண்மை தான். இரவு நேரங்களில் தங்கிச் செல்லும் சில ஊழியர்கள் இவ்வாறு ஒரு கீழ்த் தரமான செயற்பாட்டில் ஈடுபடுவது, வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாகும்.
“இத்திருட்டில் வெளியாட்கள் யாரும் ஈடுபடுவதில்லை. மாறாக சக ஊழியர்களே மோட்டார் சைக்கிளில் இருந்து எரிபொருட்களைத் திருடுகின்றனர். இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து, இனி வரும் காலத்தில் சீ.சீ.டி.வி கமெரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago