2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பருத்தித்துறையில் இந்திய மீனவர்கள் அட்டகாசம்

Gavitha   / 2021 ஜனவரி 20 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், இன்று (20) அதிகாலை நடைபெறறுள்ளது என்றும் பருத்தித்துறை சுப்பர்மடம் இறங்குதுறையிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் தொழிலுக்குச் சென்றபோதே, இச்சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு இந்திய மீனவர்களின் 4 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்தது என்றும் ஒரு மீனவரின் 20 வலைகளை, இந்திய மீனவர்கள் அறுத்து எடுத்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மீனவர்கள், தங்கள் முகங்களில் துணி கட்டி இருந்தனர் என்றும் தங்களது வலைகளைக் கேட்டு பல மணிநேரம் காத்திருந்தும், ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, பருத்தத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .