2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம்

Freelancer   / 2021 ஜூலை 24 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாஸ்கரன்

எல்லை மீறிய இந்திய மீனவர்களால் வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன் தினம் (22) கடலுக்கு சென்று வலைகள் கடலில் விடப்பட்டிருந்தன. இன்று தமது வலைகளில் மீன்களை ஏடுப்பதற்காக படகுகளில் சென்று தேடியபோது பலரது வலைகள் காணாமல் போயுள்ளதுடன் பலரது வலைகள் வெட்டப்பட்டும் துண்டாடப்பட்டும் காணப்படுகின்றன.

ஒவ்வொருவருக்கும் தலா மூனறரை இலட்சம் பெறுமதியான வலைகள் நாசமாகியுள்ளன.

இவ்வாறான சம்பவம் பல தடவைகள் இடம் பெற்றுள்ளன

இது தொடர்பாக கடற்றொழிலமைச்சருடன் பல தவைகள் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.

தற்போது கொரோனா காலத்தில் கடன் பட்டு வலைகளை கொள்வனவு செய்து தொழிலிலுக்குச் சென்றுவந்த நிலையில் நேற்றைய தினம் இவ்வாறு வலைகள் வெட்டப்பட்டு நாசம் செய்யப்பட்டதுடன் பலரது வலைகள் காணாமல் போயுள்ளன.

இதனால் இம் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .