2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பல்கலைக்கழக உணவக சாப்பாட்டில் ஈ

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் உணவகத்தில் மாணவர் ஒருவர் இன்று புதன்கிழமை வாங்கிய மதியச் சாப்பாட்டில் இரண்டு ஈக்கள் இருந்துள்ளன.

மேற்படி உணவகம் சுகாதாரச் சீர்கேடான முறையில் இயங்கி வருவதாக முன்னரே கூறப்பட்டிருந்தது. மேற்படி, உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (29) விற்பனை செய்யப்பட்ட றோல்ஸ் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக மாணவர்கள் கூறினர்.

இந்த உணவகத்தை, நடத்துவதற்கு வருடாந்தம் ஏலம் விடப்படுவது வழமை. ஆனால், இம்முறை ஏலம் விடப்படாமல் தன்னிச்சையான முறையில் உணவகம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X