2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

பல பாடசாலைகள் பின்னடிப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்நிதர்ஸன்

தங்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி, பிலவுக்குடியிருப்பு மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களினால், நேற்று (20) ஒருமணிநேரம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள சகல பாடசாலைகளின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்திருந்தனர். எனினும், யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. 

இதேவேளை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நான்கு, ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களும் நேற்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்கவில்லை.  

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட கூடாது என மத்திய அரசின் சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் வடமாகாண கல்வியமைச்சு இவ்வாறானதொரு கோரிக்கையை விடுத்திருக்குமாயின் அது தொடர்பில் பரிசீலித்திருக்க முடியும் என்றும், ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஏற்று போராட்டத்தில் ஈடுபடமுடியாது என பாடசாலைகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X