2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பலாலி பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர் கண்டியில் கைது

George   / 2015 நவம்பர் 12 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர், கண்டி தலவத்துஓயா பொலிஸாரால் புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், மதுபோதையில் சக நண்பர்களுடன் சேர்ந்து ஒருவரை தாக்கியுள்ளார்.

இச் சம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளான இளைஞன், கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தலவத்துஓயா பொலிஸார், சம்பவத்துடன் தொடர்பட்டிருந்த குற்றச்சாட்டில் மேற்படி பொலிஸ் உத்தியோஸ்தரை கைது செய்துள்ளதாகவும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .