2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், எஸ்.ஜெகநாதன்

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.வணிகர் கழகம் யாழ்.இந்திய துணைத்தூதரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிதாக பதவியேற்ற இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரனுக்கும் யாழ் வணிகர் கழக உறுப்பினர்களுக்குமிடையில்  சந்திப்பு நேற்று (16) இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப்போக்குவரத்தை ஏற்படுத்த பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யுமிடத்து வடக்கு கிழக்கு மக்கள் சுலபமாக குறுகிய நேரத்தில் குறைந்த செலவில் இந்தியாவிற்கு சென்றுவர முடியும். தற்போது எமது மக்கள் சுற்றுலாஇ யாத்திரைஇ உயர்கல்விஇ மருத்துவத்தேவை போன்ற பலவகைத் தேவைகளுக்காகவும்; இந்தியாவுக்கு சென்று வருகின்றார்கள். இந்த விமான நிலையம் இயங்கும் பட்சத்தில் இலகுவாக இந்தியா செல்ல முடியும். இந்திய மக்களும் இங்கே வர முடியும். ஆகையால் இது சம்பந்தமாக இந்திய மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தாங்கள் இத்திட்டங்களை நிறைவேற்ற உதவ வேண்டும்.

தமிழர்களின் தாயகமாகிய வடமாகாணத்தில் தமிழ் இந்துக்கலை பண்பாட்டுப் பல்கலைக்கழம் ஒன்றை திறப்பதுக்கு இ;ந்தியா தங்கள் பங்களிப்பை செய்யவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இலங்கை தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களாக தங்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். இதற்கு எமது அயல் நாடான இந்தியா மனிதாபிமான ரீதியில் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் என இலங்கை தமிழ் மக்கள்  எதிர்பார்க்கின்றனர் என வணிகர் கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X