2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு : வழக்கு ஒத்திவைப்பு

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸாருக்கும் எதிரான வழக்கை, எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதிவரை ஒத்திவைத்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று (20) உத்தரவிட்டார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகிய இருவர் மீதும், 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பொலிஸாரும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கவில்லை என குற்ற விசாரணைப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்தனர். இதனையடுத்து வழக்கை ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .