2025 ஜூலை 19, சனிக்கிழமை

பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள்; வழக்குத் தாக்கல் செய்ய உத்தேசம்

Niroshini   / 2016 ஜனவரி 06 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய சேவையின் பஸ்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வட பிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில், வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் 57 பஸ்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. தொழில் போட்டி காரணமாகவே தனியார் துறையினர் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்வதாக போக்குவரத்துச் சபையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்றது. இத்தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆராய்வதாக போக்குவரத்துச் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X