2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பஸ்ஸை நிறுத்தாது மாணவனை இறக்கி விட்ட நடத்துனர்

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தனியார் பஸ் நடத்துனரின் பொறுப்பற்ற செயலால், பாடசாலை மாணவன்  படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வியாழக்கிழமை (18) அனுமதிக்கப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திரன் அவித்தனன் (வயது 15) என்ற மாணவனே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

நெல்லியடியில் இருந்து குஞ்சர் கடை பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு பயணித்த மாணவனை பஸ்ஸை நிறுத்தாது ஓட ஓட இறக்கி விட்டுள்ளார்.

நிலை தடுமாறி விழுந்த மாணவனை மீட்ட பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவத்தடன் தொடர்புடைய பஸ் சாரதியையும் நடத்துனரையும் கைது செய்ய நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X