2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பஸ்ஸில் திருடியவர் பயணிகளால் நையப்புடைக்கப்பட்டார்

Niroshini   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பஸ்ஸில் பயணிகளின் பணப் பை மற்றும் கைபைகளில் இருந்து பணத்தை திருடிய நபரை பிடித்து பயணிகள் நையப்புடைத்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமத்துக்கு செல்லும் பஸ்ஸில் பயணித்த குறித்த நபர், பயணிகளின் பணப் பை மற்றும் கைபைகளில் இருந்து பணத்தை திருடியுள்ளார். இதனை அவதானித்த சக பயணிகள் அவரை மீசாலை பகுதியில் வைத்து நையப்புடைத்து கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர், நல்லூர் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் என தெரிவித்த பொலிஸார், அவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X