2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பஸ் இன்றி காத்திருக்கும் ஆசிரியர்கள்

Freelancer   / 2022 ஜூன் 29 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

யாழ்ப்பாணத்திலிருந்து  இரண்டு பஸ்களை பிடித்து கிளிநொச்சி வருகை தந்ததும் கிளிநொச்சியிலிருந்து  தங்களது கிராம பாடசாலைகளுக்கு செல்வதற்கு பஸ்கள் இன்றி நீண்ட நேரம் டிப்போச் சந்தியில் ஆசிரியர்கள் காத்திருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 யாழ்ப்பாணத்தில் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்து பிரதான வீதிக்கோ அல்லது யாழ் நகருக்கோ ஒரு பஸ்ஸில் பயணம் செய்து அங்கிருந்து கிளிநொச்சிக்கு பிறிதொரு பஸ்ஸில் பயணத்தை மேற்கொண்டு வருகைதந்த போதும்.  கிளிநொச்சியின் கிராமங்களில் உள்ள
தங்களது பாடசாலைகளுக்குச்  உரிய நேரத்திற்குச் செல்வதற்கு பஸ்கள் இன்மையால் காலை ஒன்பது மணிவரை வீதியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக  ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையினர் தங்கள் பணியாளர்களுக்கான எரிபொருள் கோரி பணி பகிஸ்கரிப்பில், ஈடுப்பட்டு வருகின்றனர். 

இதேவேளை தனியார் பேரூந்துகள் போதிய எரிபொருள் இன்றி தங்களது சேவையினை மட்டுப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .