2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

பஸ் தரிப்பிடத்தில் யாசகரின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 16 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம், பாசையூர் பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம், பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் தொடர்ச்சியாக யாசகம் பெற்று வந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் உள்ளதாகவும் அவரின் பெயரை அறிய முடியாத நிலை உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை மீட்டு, சட்ட வைத்திய அதிகாரி ஊடாக உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X