2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

பஸ் மீது கல்வீச்சு தாக்குதல்

Editorial   / 2017 நவம்பர் 30 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. மகா

பருத்தித்துறை பஸ் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம், புறாப்பொறுக்கி பகுதியிலுள்ள ஹோட்டலுக்கு அருகில் உள்ள வயல் வெளியில் வைத்து, இன்று (30) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இக் கல்வீச்சினால், பஸ் சாரதி மற்றும் பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பஸ்ஸுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

வடபிராந்திய போக்குவரத்து சபையின் பாதுகாப்பு தரப்பு மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரின் நடவடிக்கைகளை கண்டித்து, யாழ். இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ ஊழியர்கள், புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால், இப்போராட்டத்துக்கு பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊழியர்கள் ஆதரவு தெரிவிக்காது, தமது கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இதன் விளைவாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .