2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை நேரங்களில் வாயில்கள் பூட்டப்பட வேண்டும்

எம். றொசாந்த்   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை ஆரம்பமாகி முடிவடையும் வரை பாடசாலை வளாக அனைத்து கதவுகளும் மூடப்பட வேண்டும். வெளியாட்கள் யாரையும் பாடசாலைக்குள் அனுமதிக்க கூடாது என வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் வடக்கின் சகல கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 29ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அந்நிலையில், பாடசாலைகளினதும், மாணவர்களினதும் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தும் முகமான நடவடிக்கைகள் தொடர்பில் வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது.

அக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரின் செயலாளர்,  கல்வி அமைச்சின் செயலாளர், மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதன்போது, பாடசாலை ஆரம்பமாகி முடிவடையும் வரையில் பாடசாலை வளாகத்தின் அனைத்து வாயில் கதவுகளும் பூட்டப்பட வேண்டும். வெளியாட்கள் யாரும் பாடசாலை வளாகத்தினுள் அனுமதிக்க கூடாது. மாணவர்கள் ஆசிரியர்களின் வரவு, விடுகை தொடர்பில் அதிபர் கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் பாடசாலை வளாகத்தின் வெளி பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X